Ads (728x90)


தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குக் கிடைத்த தேசியப் பட்டியல் ஆசனத்தை அம்பாறையை சேர்ந்த த.கலையரசனிற்கு வழங்கப்படுவதாக இன்று காலை அறிவிக்கப்பட்டது. இது நடந்து சில மணித்தியாலங்களில் அந்த முடிவு மாற்றப்பட்டு தேசியப்பட்டியல் நியமனம் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது.

கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளும், தமிழரசுக் கட்சியின் மாவை சேனாதிராஜாவுக்கு ஆதரவான பிரிவினரும் இதற்கு கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்திருந்தனர், யாரையும் கலந்தாலோசிக்கால் எடுக்கப்பட்ட இந்த முடிவை உடன் நிறுத்துமாறும் கடும் அழுத்தம் கொடுத்திருந்தனர்.

மாவை சேனாதிராஜாவை தேசியப்பட்டியல் மூலமாக நியமிப்பதற்கு எடுக்கப்படும் முயற்சியை முறியடிப்பதற்காகவே அவசரமாக ம்கலையரசனின் பெயர் அறிவிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பங்காளிக் கட்சிகளான ரெலோ, புளொட் அமைப்புக்களின் தலைமைகளுடன் இரா.சம்பந்தன் சம்பிராயத்துக்கு கூட கலந்துரையாடவில்லை எனவும், இந்த நியமனத்தினால் தாம் அதிர்ச்சியடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

தற்போதைய நிலவரப்படி தேசியப்பட்டியல் விவகார சர்ச்சையை தீர்த்து வையுங்கள் என, இரா.சம்பந்தன் அவசர கடிதமொன்றை மாவை சேனாதிராசாவிற்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரியவருகின்றது.

தேர்தல் முடிவு வெளியான மறுநாளே எம்.எ.சுமந்திரன் செய்தியாளர் சந்திப்பை நடத்தி, கட்சி தலைமையில் மாற்றம் செய்யப்பட வேண்டுமென்ற சாரப்பட கருத்து தெரிவித்திருந்தமையும், அதற்கு மறுநாள் சி.சிறிதரன் செய்தியாளர் சந்திப்பை நடாத்தி கட்சி தலைமையை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறேன் என அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.



Post a Comment

Recent News

Recent Posts Widget