Ads (728x90)

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதற்கு ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார். சிறிகொத்தவில் இன்று இடம்பெற்ற விசேட கூட்டத்தில் ரணில் விக்ரமசிங்கவினால் இம்முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். இதேவேளை கட்சியின் தலைமைப் பதவிக்கு ரவி கருணாநாயக்க, தயா கமகே, வஜிர அபேவர்தன அகில விராஜ் காரியவசம் ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் 22 தேர்தல் தொகுதிகளில் எந்தவொரு தொகுதியிலும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு எந்தவொரு ஆசனமும் கிடைக்காது தோல்வியை தழுவியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ரணில் விக்ரமசிங்க தனது 42 வருட அரசியல் வரலாற்றில்  முதல் தடவையாக இத்தோல்வியை சந்தித்துள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget