Ads (728x90)

அரச சேவை என்பது ஒரு வரப்பிரசாதமாகும். இதுவொரு மக்கள் சேவை. அரச உத்தியோகத்தர்கள் பெற்றுக்கொள்ளும் சம்பளமானது மக்களது வரிப்பணத்தில் வழங்கப்படுவதாகும். எனவே நீங்கள் மக்களுக்கு நீதியாகவும், நேர்மையாகவும், அர்ப்பணிப்புடனும் சேவையாற்றுமாறும் கேட்டுகொண்டுள்ளார்.

நேர்முகத் தேர்வில் தெரிவு செய்யப்பட்ட வடக்கு மாகாண முகாமைத்துவ சேவை பதவியணியினருக்கான நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வு வடக்கு மாகாண ஆளுநர் திருமதி.பீ.எஸ்.எம்.சாள்ஸ் தலைமையில் ஆளுநர் செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றபோதே இவ்வாறு தெரிவித்தார்.

சட்டபூர்வ ஏற்பாடுகளுக்கமைய உங்களுக்கு வழங்கப்படும் இந்த நியமனத்தை பெற்றுக்கொள்ளும் நீங்கள் அனைவரும் உங்களுக்கு இந்த ஆணையை தந்த மக்களுடன் இணைந்து செயற்பட்டு உங்களது தார்மீகக் கடமைகளைச் சரிவர நிறைவேற்ற வேண்டும். உங்களுக்குக் கிடைக்கும் பயிற்சிசள் மூலம் மேலதிகப் பதவி உயர்வுகளைப் பெற்று அரச சேவையில் அர்ப்பணிப்பாகவும், நேர்மையாகவும் சேவையாற்ற வேண்டுமென்றும் கேட்டுக்கொள்கின்றேன்.

மேலும் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களாலேயே அலுவலக் கோவைகள் மற்றும் ஆவணங்கள் மேலதிகாரிகளுக்கு சமர்ப்பிக்கப்படுகின்றது. எனவே குறிப்பிட்ட விடயங்களை சுட்டிக்காட்டி உரிய முறையில் அவற்றை ஒழுங்கமைத்து மக்களுக்குச் சேவையாற்ற வேண்டுமென்றும் கேட்டுக்கொள்கின்றேன் என்றும் ஆளுநர் திருமதி.பீ.எஸ்.எம்.சாள்ஸ் தெரிவித்தார்.

.

Post a Comment

Recent News

Recent Posts Widget