Ads (728x90)

க.பொ.த சாதாரண தர பரீட்சை 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 18 ஆம் திகதி தொடக்கம் 27 ஆம் திகதி வரை நடைபெறும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

இந்த காலப்பகுதியில் ஏனைய மாணவர்களுக்கு விசேட விடுமுறை வழங்கப்படுமெனவும் அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

க.பொ.த சாதாரண தர பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்காக மாத்திரம் 2021 ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் 2021 ஜனவரி 17 ஆம் திகதி வரை பரீட்சைக்கு தயாராவதற்கான விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே இம்முறை புலமைப்பரிசில் பரீட்சைகள் ஒக்டோபர் மாதம் 11 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளதாகவும், க.பொ.த உயர்தர பரீட்சையை ஒக்டோபர் 12 ஆம் திகதி முதல் நவம்பர் 06 ஆம் திகதி வரை நடர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.



Post a Comment

Recent News

Recent Posts Widget