Ads (728x90)


அரசாங்கம் கொண்டு வர உத்தேசித்துள்ள 20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் சம்பந்தமாக மக்களுக்கு விளக்கப்படுத்தும் கருத்தரங்குகளை நடாத்த மக்கள் விடுதலை முன்னணி தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் 24 ஆம் திகதி முதல் இந்த கருத்தரங்குகள் நாடு முழுவதும் ஆரம்பிக்கப்படும் என அந்த முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் ஊடாக நாட்டின் ஜனநாயகம் மற்றும் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்குவது இந்த கருத்தரங்குகளின் நோக்கம் எனவும் அவர் கூறியுள்ளார்.


அரசாங்கம் கொண்டு வர உத்தேசித்துள்ள 20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டால், மக்களின் ஜனநாயக உரிமைகள் பறிக்கப்படும் என்பதுடன், தனி நபரிடம் அனைத்து அதிகாரங்களும் செல்லும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget