Ads (728x90)

கலைத்துறைக்கான வௌிவாரி பட்டப்படிப்பிற்கான புதிய பதிவுகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கலைத்துறைக்கான பாடநெறிகளை மீளாய்விற்கு உட்படுத்தவும், புதிய பாடநெறிகளை சேர்ப்பதற்காகவும் புதிய நிபுணர் குழுவொன்றை நியமிக்கவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார்.

எதிர்கால தொழில்வாய்ப்புகளை இலக்காகக் கொண்டு குறித்த நிபுணர் குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய புதிய பாடத்திட்டங்களை கலைத்துறைக்கு அறிமுகப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

தற்போது கலைத்துறையில் காணப்படும் பாடத்திட்டங்கள் நீண்டகாலமாக மறுசீரமைக்கப்படவில்லை எனவும் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

புதிய பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர் கலைத்துறைக்கான வௌிவாரி பட்டப்படிப்பிற்கு புதிய மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.

எனினும் நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களினூடாக முன்னெடுக்கப்படும் முகாமைத்துவம் மற்றும் விஞ்ஞானம் உள்ளிட்ட ஏனைய வௌிவாரி பட்டப்படிப்பிற்கான பதிவுகள் நிறுதப்படவில்லை எனவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget