Ads (728x90)

கொரோனா தொற்று பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த அனைத்து பாடசாலைகளும் கல்வி நடவடிக்கைக்காக எதிர்வரும் 08 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் வழமை போல் மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

பல கட்டங்களாக ஆரம்பிக்கப்பட்ட பாடசாலைகளில் ஆரம்ப வகுப்புக்களின் கல்வி நடவடிக்கைகள் செவ்வாய்க்கிழமை முதல் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார்.

செப்டெம்பர் 02 ஆம் திகதி தொடக்கம், 06 முதல் 13 ஆம் வகுப்பு வரையிலான கல்வி நடவடிக்கைகள் வழமைபோல் ஆரம்பமாகியது.

ஆரம்ப வகுப்புகளின் ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் நாளை பாடசாலைக்கு வருவார்கள் எனவும் கல்வி நடவடிக்கைகள் வழமைபோல் நாளை முதல் ஆரம்பமாகும் என  கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் பாடசாலை மாணவர்கள் சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றுவதை தவிர்க்கின்றனர் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே பாடசாலைகளில் சரியான சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றுதல் அவசியம் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.





Post a Comment

Recent News

Recent Posts Widget