இத்தாலி அரசாங்கத்தினால் பேராயர் வண.கார்தினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கு கிடைத்த நன்கொடை மூலம் நிர்மாணிக்கப்பட்ட விவசாய தொழிநுட்ப நிறுவனத்தை ஜனாதிபதி அவர்கள் திறந்து வைத்தார்.
50 மாணவர்கள் தங்கி இருந்து பயிற்சி பெறக்கூடிய வகையில் நிறுவனம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. பிரதேசத்தின் குறைந்த வருமானமுடைய பிள்ளைகளுக்கு பயிற்சியை வழங்குவதற்கு இங்கு அதிக சந்தர்ப்பம் வழங்கப்படும் என்று கார்தினல் ஆண்டகை அவர்கள் குறிப்பிட்டார்.
மதுரங்குளி ஆதர்ஷ மாதிரி பாடசாலைக்குச் விஜயம் செய்த ஜனாதிபதி மாணவர்களுடன் சுமூகமாக கலந்துரையாடினார். பாடசாலையின் விளையாட்டு மைதானத்தை நிர்மாணித்துத் தருமாறு மாணவர்கள் விடுத்த வேண்டுகோளை இராணுவ தளபதிக்கு அறிவித்த ஜனாதிபதி, உடனடியாக அதனை நிர்மாணித்துக் கொடுக்குமாறு உத்தரவிட்டார்.
வீதியின் மறுபுறம் அமைந்துள்ள ஆரம்ப பாடசாலையை இணைக்கும் வகையில் மேம்பாலம் ஒன்றை நிர்மாணித்துத் கொடுக்குமாறு ஜனாதிபதி அவர்கள் நெடுஞ்சாலை அமைச்சின் செயலாளருக்கு அறிவித்தார்.
புத்தளம் மாவட்டத்தின் அபிவிருத்தித் திட்டங்களை பார்வையிட்டதோடு,
மதுரங்குளி பாலச்சோனை விவசாய தோட்டத்தின் செயற்பாடுகளை கேட்டறிந்து கொண்டார்.

Post a Comment