Ads (728x90)


கொழும்பில் மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வீதி நிரல் சட்டத்தை மீறும் சாரதிகளுக்கு எதிராக இன்று முதல் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து வாகன கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு தொடர்பான பணிப்பாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான இந்திக்க ஹப்புகொட தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில், கடந்த இரண்டு வார காலமாக வீதி நிரல் சட்டம் தொடர்பில் சாரதிகளுக்கு தெளிவுபடுத்தியிருப்பதாகவும் தெரிவித்தார்.

கடந்த வாரத்தில் வீதி நிரல் சட்டத்தை மீறிய நபர்கள் நேற்று முன்தினம் அழைக்கப்பட்டு அவர்களுக்கு தெளிவுபடுத்தும் வகுப்புக்கள் நடத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.

கொழும்பின் 04 பிரதான வீதிகளை கேந்திரமாக கொண்டு வீதி நிரல் சட்டம் காலை 6.00 மணி தொடக்கம் 9.00 மணி வரையிலும் மாலை 4.00 மணி தொடக்கம் இரவு 8.00 மணி வரையிலும் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

Post a Comment

Recent News

Recent Posts Widget