பாடசாலை மாணவர்களுக்கான சீருடை வவுசர்களுக்கு பதிலாக சீருடை துணிகளை வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
பாடசாலை மாணவர்களுக்கான இலவச சீருடை துணி வழங்கும் நடைமுறையை மீள செயற்படுத்த ஜனாதிபதி செயலத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சி.பி. ரத்நாயக்க தெரிவித்தார்.
அடுத்த வருடம் முதல் பாடசாலை மற்றும் பாதுகாப்பு படையினரின் சீருடை விநியோகத்தில் உள்ளூர் உற்பத்தியாளர்களை அதிகளவில் ஈடுபடுத்துவதற்கான இயலுமை தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
Post a Comment