Ads (728x90)


இன்று முதல் அமுலாகும் வகையில் தேங்காய்க்கு உச்சபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பிலான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் தலைவர் ஷாந்த திஸாநாயக்கவினால் வெளியிடப்பட்டுள்ளது.

உற்பத்தியாளர், விநியோகத்தர் அல்லது வியாபாரி எவரேனும் குறித்த உச்சபட்ச சில்லறையை விலைகளுக்கு கூடுதலாக விற்பனை செய்யவோ, விற்பனைக்கு விடவோ, விற்பனைக்கு வெளிப்படுத்தவோ அல்லது விற்பனைக்காக காட்சிப்படுத்தவோ முடியாது என பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை குறித்த வர்த்தமானியில் உத்தரவிட்டுள்ளது.

தேங்காயின் சுற்றளவின் அடிப்படையில் ரூபா 60 முதல் ரூபா 70 வரை உச்சபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சுற்றளவில் 12 அங்குலத்திற்கு குறைவான தேங்காய் 60 ரூபாவாகவும், 12 - 13 அங்குலத்திற்கு இடைப்பட்ட சுற்றளவான தேங்காய் 65 ரூபாவாகவும், 13 அங்குலத்திற்கு மேற்பட்ட சுற்றளவான தேங்காய் 70 ரூபாவாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.



Post a Comment

Recent News

Recent Posts Widget