Ads (728x90)


கொரோனா தொற்று காரணமாக சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது ஒட்டுமொத்த இசையுலகிற்கும் நேர்ந்த பேரிழப்பு ஆகும்.

இந்நிலையில் பல்துறை பிரமுகர்கள், சினிமா நட்சத்திரங்கள், ரசிர்கள் , விளையாட்டு வீரர்கள் எனப் பலரும் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்திய மக்கள் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்த திரு.எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்களின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அன்னாருக்கு காவல் துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். .

Post a Comment

Recent News

Recent Posts Widget