Ads (728x90)

உடலின் இரு பிரதான உறுப்புக்களான இதயம் மற்றும் ஈரலை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் லிச்சி பழம் முதலிடத்தில் உள்ளது.

லிச்சி பழத்தில் புரதம், கொழுப்பு, நார்ச்சத்து, கல்சியம், மாச்சத்து, பொஸ்பரஸ், இரும்பு, தையாமின், ரிபோப்ளோவின், நியாசின், மாலிக் அமிலம், சிட்ரிக் அமிலம் மற்றும் வைட்டமின் சி ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன. தினமும் ஒரு லிச்சி பழம் உண்டு வந்தால் இரத்த உருவாக்கம் அதிகரிக்கும்.

இருமல், சளி, காய்ச்சல், போன்ற பொதுவான நோய்களுக்கு எதிராக போராடி உடலுக்கு தேவையான பாதுகாப்பை அளிக்கிறது. மேலும் நோய் தொற்று ஏற்படாமல் தடுக்கிறது.

லிச்சி பழத்தை தினமும் உண்டு வந்தால் இதயம் நல்ல ஆரோக்கியத்துடன் சுறுசுறுப்பாக வேலை செய்யும். லிச்சிப் பழத்தில் சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் புற்றுநோய் எதிர்ப்பு பொருள் உள்ளதால், இதனை உட்கொண்டால் பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோயில் இருந்து நல்ல  பாதுகாப்பு கிடைக்கும்.


Post a Comment

Recent News

Recent Posts Widget