Ads (728x90)

ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் பெயர்களை குறிப்பிட்டு பாடசாலைகளில் மாணவர்களை இணைத்துக் கொள்ள முயற்சிக்கப்பட்டால் அதனை உடனடியாக நிராகரிக்குமாறு நாட்டிலுள்ள சகல பாடசாலை அதிபர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி, ஜனாதிபதி அலுவலக அதிகாரிகள், பிரதமரின் அலுவலக அதிகாரிகள் மற்றும் ஏனைய உயர் அரச அதிகாரிகளின் உத்தரவு என்று குறிப்பிட்டு பாடசாலைகளுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளுமாறு அழுத்தங்களை பிரயோகிக்கும் வகையில் பாடசாலை அதிபர்களுக்கு பலர் கடிதங்களை அனுப்பி வைக்கின்றனர். சில சந்தர்ப்பங்களில் அரச அதிகாரிகள் கூட இவ்வாறான கடிதங்களை அனுப்பி வைக்கப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது.

அதிபர்கள் தமது பாடசாலைக்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும்போது அவ்வாறான எந்தவொரு கடிதத்தையும் அடிப்படையாக எடுக்கக்கூடாது. உரிய நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகளுக்கு அமைவாக மாத்திரமே மாணவர்களை பாடசாலைகளுக்கு இணைத்துக் கொள்ளப்பட வேண்டும்.

இந்த ஒழுங்கு விதிகளை மீறுகின்ற அதிபர்களுக்கு எதிராக கடுமையான
நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதியின் செயலாளர் அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் அறிவித்துள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget