ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்ஸோ அபேவின் இராஜினாமாவை தொடர்ந்து யொஷிஹிடே சுகா புதிய பிரதமராக தெரிவாகியுள்ளார்.
அந்நாட்டுப் பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வாக்கெடுப்பின் மூலம் யொஷிஹிடே சுகா ஜப்பானின் புதிய பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். 462 பாராளுமன்ற உறுப்பினர்களில் 314 உறுப்பினர்கள் சுகாவுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
ஜப்பானில் அடுத்த வருடம் செப்டெம்பர் மாதம் பொதுத் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், அதுவரை புதிய பிரதமராக யோஷிஹிடே சுகா பதவியில் நீடிக்கவுள்ளார்.
உடல்நிலை குறைவு காரணமாக ஜப்பானின் பிரதமர் பதவியிலிருந்தும், கட்சியின் தலைவர் பதவியிலிருந்தும் ஷின்ஸோ அபே கடந்த மாதம் விலகியமை குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment