Ads (728x90)


தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை வலியுத்தி தமிழ் தேசிய நிலைப்பாட்டில் இயங்கும் கட்சிகள் திட்டமிட்டபடி இன்று காலை உணவு தவிர்ப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

யாழ்.தொண்டமனாறு செல்வச்சந்நிதி ஆலய முன்றலில் குறித்த உணவு தவிர்ப்பு போராட்டத்தை நடத்துவதற்கு தீர்மானித்திருந்த நிலையில் பருத்துறை நீதிமன்றம் நேற்று பிற்பகல் தடைவிதித்திருந்தது. 

இந்நிலையில் தமிழ்தேசிய கட்சிகள் திட்டமிட்டபடி இன்று காலை சாவகச்சோி சிவன்கோவில் வளாகத்தில் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது. 

போராட்டத்தில் சகல கட்சிகளினதும் பிரதிநிதிகள் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். 

தமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள அடக்குமுறைகளை அரசு நிறுத்தவேண்டும் என்று கோரி ஒன்றிணைந்த தமிழ் தேசியக் கட்சிகளால் முன்னெடுக்கப்படும் அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களும் இணைந்து கொண்டனர்.

Post a Comment

Recent News

Recent Posts Widget