Ads (728x90)

யாழ்.மாவட்ட சந்தைகளில் விவசாயிகளின் தலையில் அடிக்கும் தரகர்களை விரட்டியடிக்குமாறு விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே ஆளுநருக்கு உத்தரவிட்டுள்ளார். விரட்ட முடியாவிட்டால் கைது செய்யுங்கள் எனவும் உத்தரவிட்டிருக்கின்றார்.

இன்று யாழ்.மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த அமைச்சர் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் விவசாய அமைச்சு, திணைக்கள அதிகாரிகள் மற்றும் விவசாயிகளுடன் கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொண்டிருந்தார்.

இதன்போது மாவட்டத்திலுள்ள பொது சந்தைகளில், இடைத்தரகர்களால் விவசாயிகள் மற்றும் உற்பத்தியாளர்கள் பொிதும் பாதிக்கப்படுவதாக அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவந்த விவசாயிகள், பொதுச் சந்தைகளில் தரகர்களின் ஆதிக்கம் பெருமளவில் அதிகரித்துள்ள நிலையில், விவசாயிகள் மற்றும் உற்பத்தியாளர்களின் பொருட்களுக்கு தரகர்களே விலை நிர்ணயம் செய்யும் பரிதாப நிலை காணப்படுவதாகவும் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.

இதனையடுத்து கோபமடைந்த அமைச்சர், இலங்கையின் பிற மாவட்டங்களில் உள்ள சந்தைகளில் தரகர்கள் இல்லை. யாழ்.மாவட்டத்தில் விவசாயிகளை பாதிக்கும் வகையில் தரகர்களை உருவாக்கியது யார்? என கேள்வி எழுப்பியதுடன் யாழ்.மாவட்ட சந்தைகளில் இருந்து தரகர்களை விரட்டியடிக்குமாறும், விரட்டியடிக்க முடியாவிட்டால் கைது செய்யுமாறும் ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் மற்றும் உள்ளுராட்சி உதவி ஆணையாளர் ஆகியோருக்கு உத்தரவிட்டார்.

மேலும் யாழ். சந்தைகளில் விவசாயிகளிடம் இருந்து அறவிடப்படும் 10 வீத கழிவினையும் உடனடியாக நிறுத்துமாறும் உத்தரவிட்டார். யாழ்.மாவட்ட விவசாயிகள் ஒரு காலத்தில் பணக்காரர்களாக இருந்தார்கள். அவர்கள் தங்கள் உற்பத்திகளை வெளிமாவட்டங்களுக்கும் கொடுத்தார்கள். ஆனால் இப்போது வறுமையுடன் போராடுகிறார்கள். அந்த நிலையை மாற்றியமைப்பேன் என அமைச்சர் கூறினார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget