Ads (728x90)


2020 ஆம் ஆண்டிற்கான கல்வி பொதுத்தராதர பத்திர உயர்தர பரீட்சை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி தொடக்கம் நவம்பர் மாதம் 06 ஆம் திகதி வரை நடைபெறும் எனபரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பீ.சனத் பூஜித தெரிவித்துள்ளார் .

இப்பரீட்சைக்காக நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 2,648 மத்திய நிலையங்களில் பரீட்சை நடைபெறவிருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை 2020 ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஒக்டொபர் மாதம் 11 ஆம் திகதி நாடு முழுவதிலும் உள்ள 2,936 மத்திய நிலையங்களில் நடைபெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பரீட்சை நடைபெறவுள்ள காலப்பகுதிக்குள் பரீட்சை மத்திய நிலையங்கள் அமைந்துள்ள பாடசாலைகளில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு சுகாதார அமைச்சு, தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு, மாகாண கல்வி பணிப்பாளர்கள் வலையகல்வி பணிப்பாளர்கள், அதிபர்கள் உள்ளிட்டோருக்கு இது தொடர்பாக அறிவிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.




Post a Comment

Recent News

Recent Posts Widget