Ads (728x90)


யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் இணையவழி பாலியல் பகிடிவதை இடம்பெற்றது என்பதை பல்கலைகழக துணைவேந்தர் எஸ்.சிறி சற்குணராஜா பல்கலைகழகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். 

நீலப்படங்களை போன்ற பகிரங்கமாக சொல்ல முடியாத விதமான பாலியல் அத்துமீறலில் ஈடுபட மாணவர்கள் முயன்றதாக அதிர்ச்சி செய்தியையும் துணைவேந்தர் வெளியிட்டுள்ளார்.

கொரோனாவிற்கு பின்னர் பல்கலைகழக விரிவுரைகள் ஒன்லைனில் நடக்கின்றது. இந்நிலையில் பகிடிவதையும் ஒன்லைனிற்கு சென்றுள்ளது. சைபர் குற்றத்தில் ஈடுபட்ட மாணவர்கள் என்ன கேட்டார்கள் என்பதை நான் சொன்னால், நீங்கள் திணறிப் போய் விடுவீர்கள். பொது இடத்தில் சொல்ல முடியாதது. 

உனது அக்கா பலாலியில் இராணுவத்தில் இருக்கிறார்தானே என்றும் ராகிங்கில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர். இது தனியே மன எழுச்சியால் நடப்பதல்ல. அதற்கு அப்பால் அரசியல் பின்னணியுள்ளவை. ஏற்கனவே பல்கலகழகத்தில் நடந்த மோதல் ஒன்றின் அரசியல் பின்னணியை நான் சுட்டிக்காட்டியுள்ளேன். பல்கலைக்கழகத்திற்கு வரும் கிராமப்புற மாணவர்கள் அரசியல் கட்சிகளின் செல்வாக்கிற்குட்பட்டுள்ளனர்.

பகிடிவதையை தடுக்க துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதற்கான பொறிமுறை அமைக்கப்பட்டுள்ளது. மாணவர் ஒழுக்காற்று சபை ஒன்றை உருவாக்கியுள்ளோம். 

சைபர் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் சிறப்பு பட்டங்கள் பெற முடியாது. 04ஆம் வருட கற்கையில் ஈடுபட முடியாது. சிறப்பு தேர்ச்சிகள் வழங்கப்படாது. ஆகக்குறைந்தது ஒரு வருடம் அனைத்து கல்வி நடவடிக்கையில் இருந்தும் நிறுத்தப்படுவார்கள்.

நாங்கள் மேற்கொண்ட ஆரம்ப கட்ட விசாரணையின் அடிப்படையில் சந்தேகத்திற்குரிய 2 ஆம் வருடத்தை சேர்ந்த 04 மாணவர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்கு வகுப்பு தடை விதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது எனவும் வணிக, முகாமைத்துவ பீட பேராசிரிநர் பாலசுந்தரம்பிள்ளை நிமலதாசன் தெரிவித்தார்.

அவர்களிற்கு உதவியதற்காக, விசாரணையில் நம்பக தன்மையை ஏற்படுத்த முதலாம் வருட மாணவர்கள் விடுதியை விட்டு வெளியேற்றப்பட்டனர். இந்த இம்சையில் ஈடுபட்டவர்களிற்கு சிறப்பு கற்கை நெறி வழங்கப்படாது. ஒரு வருட வகுப்புத்தடை விதிக்கப்படும். இணைய குற்றம் தொடர்பில் பொலிசாரிடமும் முறையிடப்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.



Post a Comment

Recent News

Recent Posts Widget