அரசுக்கு சொந்தமான காணிகளில் ஆவணங்கள் இல்லாமல் குடியிருக்கும் மக்களுக்கே அந்த காணிகளை பகிர்ந்தளித்து சட்டரீதியான ஆவணங்களை வழங்குவது தொடர்பில் வெளியிடப்பட்டிருந்த 2192/36 என்ற இலக்க சிறப்பு வர்த்தமானி அறிவித்தல் இரத்து செய்யப்பட்டுள்ளது.
2192/36 என்ற இலக்கமுடைய அந்த வர்த்தமானி அறிவிப்பை இரத்துச் செய்வதாக காணி ஆணையாளர் நாயகம் ஆர்.எம்.சீ.எம். ஹெரத், மற்றொரு சிறப்பு வர்த்தமானி அறிவிப்பை நேற்று வெளியிட்டுள்ளார்.
கம்பஹா மற்றும் கொழும்பு தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் இதற்காக விண்ணப்பிப்பதற்குரிய மாதிரி விண்ணப்பப்படிவம் மற்றும் வழிகாட்டு நெறிகளை உள்ளடக்கிய சிறப்பு வர்த்தமானி அறிவித்தல் காணி ஆணையாளர் நாயகத்தினால் கடந்த 10ஆம் திகதி வெளியிடப்பட்டது. அதில் விண்ணப்பங்கள் இம்மாதம் 30 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment