சார்ஜாவில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 16 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 216 ஓட்டங்களை குவித்தது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி சார்பாக சஞ்சு சம்சொன் 9 சிக்சர்களுடன் 32 பந்துகளில் 74 ஓட்டங்களையும், இருபதுக்கு 20 அரங்கில் முதற்தடவையாக ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய அணித்தலைவர் ஸ்டீவன் ஸ்மித் 69 ஓட்டங்களையும் பெற்றனர்.
வேகப்பந்து வீச்சாளரான ஜொப்ரா ஆர்ச்சர் லுங்கி இங்கிடியின் கடைசி ஓவரில் 27 ஓட்டங்களை பெற்றார். அதில் 04 சிக்சர்கள் அடுத்தடுத்து அடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் அரங்கில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி போட்டியொன்றில் பெறும் அதிகூடிய ஓட்ட எண்ணிக்கை இதுவாகும்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சென்னை சுப்பர் கிங்ஸ் அணி சார்பாக ஷேன் வொட்சன் 04 சிக்சர்களுடன் 33 ஓட்டங்களையும், பெப் டு பிளசிஸ் 07 சிக்சர்களுடன் 37 பந்துகளில் 72 ஓட்டங்களை விளாசி வெற்றிக்காக போராடினர்.
அணித்தலைவர் மஹேந்திர சிங் தோனி கடைசி ஓவரில் 03 சிக்சருடன் 29 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றார். சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 200 ஓட்டங்களையே பெற்று தோல்வியை தழுவியது.

Post a Comment