Ads (728x90)


உலகம் முழுவதும் கொரொனாவுக்கு எதிரான தடுப்பூசிகள் பரிசோதனையில் உள்ள நிலையில் ரஷ்ய தடுப்பூசி நன்றாக செயல்படுவதாக உலக சுகாதார நிறுவனம் பாராட்டியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனாவால் பல கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பதில் உலக நாடுகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் ஒக்ஸ்போர்ட் தடுப்பூசி கோவாக்சின், ரஷ்யாவின் ஸ்புட்னிக் ஆகியவை பரிசோதனையில் உள்ளன.

இந்நிலையில் ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசி மூன்றாம் கட்ட சோதனையில் இருக்கும்போதே மக்களுக்கு வழங்கப்பட்டது என்று பலரும் குற்றம் சாட்டினர். உலக சுகாதார நிறுவனம் ரஷ்யா துரிதமாக செயல்படுவது ஆபத்தானது என்று தெரிவித்திருந்தது. 

இந்நிலையில் தற்போது பரிசோதனையில் உள்ள தடுப்பூசிகளில் ரஷ்யாவின் தடுப்பூசி பாதுகாப்பானதாகவும், வலிமையானதாகவும் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget