Ads (728x90)


தமிழர்களின் நினைவேந்தல் உரிமையை தடுத்த அரசுக்கு எதிராக ஒன்றிணைந்த தமிழ் தேசிய கட்சிகளின் ஏற்பாட்டில் இன்றைய தினம் வடக்கு கிழக்கில் அனுஷ்டிக்கப்பட்ட கதவடைப்பால் வடக்கு மாகாணம் முழுமையாக முடங்கிப்போனது. 

தமிழர்களின் உரிமை மறுப்பு மற்றும் நினைவேந்தல்களுக்கான தடை ஆகியவற்றை கண்டித்து தமிழ் கட்சிகளினால் விடுக்கப்பட்ட அழைப்புக்கு யாழ்ப்பாணம் மக்கள் பூரண ஆதரவினை வழங்கியுள்ளார்கள்.

ஹர்த்தாலினால் யாழ்ப்பாண நகரம் முற்றாக முடங்கியதுடன் யாழ்ப்பாண வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டன. பாடசாலைகளுக்கு மாணவர்கள் செல்லவில்லை. இதனால் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.

பொது மக்கள் வீதிகளில் பயணிக்கவில்லை, அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த அனைத்து சேவைகளும் இன்றைய தினம் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன.

இதேபோல் யாழ்.மாவட்டத்தின் ஏனைய பிரதேசங்களிலும் வர்த்தக நிலையங்கள் பூட்டப்பட்டு, மக்கள் நடமாட்டமில்லாமல் காணப்படுகின்றது. கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் மாவட்டங்களிலும் ஹர்த்தாலுக்கு பூரண ஒத்துழைப்பு மக்களால் வழங்கப்பட்டுள்ளது.

தமிழர்களின் நினைவேந்தல் உரிமையை தடுத்த அரசுக்கு எதிராக ஒன்றிணைந்த தமிழ் தேசிய கட்சிகளின் ஏற்பாட்டில் இன்றைய தினம் வடக்கு கிழக்கில் அனுஷ்டிக்கப்பட்ட ஹர்த்தாலுக்கு யாழ்ப்பாணம் முஸ்லிம் மக்களும் பூரண ஆதரவினை வழங்கியுள்ளார்கள்.

வவுனியாவில் பொலிஸாரின் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் முழுமையான ஹர்த்தால் அஷ்டிக்கப்பட்டது.




Post a Comment

Recent News

Recent Posts Widget