Ads (728x90)


தமிழர்களின் நினைவேந்தல் உரிமையை தடுக்கும் அரசுக்கு எதிராக வடக்கு-கிழக்கில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படும் நிலையில் யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் இராணுவத்தினரும், பொலிஸாரும் இணைந்து அச்சுறுத்தல் விடுத்து சில கடைகளை திறக்க செய்துள்ளனர்.

அச்சுவேலி பகுதியில் கடைகளை திறக்குமாறு கடை உரிமையாளர்களுக்கு பொலிஸாரும், இராணுவத்தினரும் இணைந்து அச்சுறுத்தல் விடுத்து வந்த நிலையில் அங்கு சென்ற வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் நிரோசுக்கு பொலிஸ் மற்றும் இராணுவ புலனாய்வாளர்களால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அச்சுவேலி சந்தியில் உள்ள பேருந்து தரிப்பிடத்துக்கு முன் இராணுவம் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். 

இச்சம்பவம் தொடர்பாக வலி கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் நிரோஷ் கருத்து தெரிவிக்கையில், நானும், உப தவிசாளரும் சென்று கடை உரிமையாளர்களிடம் பேசிய போது அவர்கள் தங்களை கடைகளை திறக்குமாறு பொலிஸாரும், இராணுவ புலனாய்வாளர்களும் அச்சுறுத்தியதாக தெரிவித்தனர். 

பஜிரோ ரக வாகனத்தில் வந்த இராணுவ உயரதிகாரிகள் என்னுடைய வாகனத்துக்கு முன்பாகவும், பின்பாகவும் பல தடவைகள் இடையூறு விளைவித்து அச்சுவேலி மத்திய கல்லூரி முன் வீடியோவும் எடுத்தார்கள். இந்த விடயம் தவிசாளர் என்கிற முறையில் என்னை அச்சுறுத்துகின்ற விடயமாகும்.

உங்களை கைது செய்வோம் என அச்சுவேலிப் பொலிஸார் மிரட்டினர். அச்சுறுத்தப்பட்டு கடைகள் திறக்க வைக்கப்பட்டால் தவிசாளர் என்கிற முறையில் கடைக்காரர்களிடம் கேட்டறிவதாக பொலிஸாரிடம் கூறினேன். இராணுவ அச்சுறுத்தலின் பேரில் இங்கே சில கடைகள் திறக்கப்பட்டுள்ளன. எமது தலையீட்டால் வர்த்தகள் கடைகளை மூடியுள்னர் என்றார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget