Ads (728x90)

தற்போதைக்கு நாடாளுமன்றம் செல்லப்போவதில்லை என பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். செய்தியாளரின் கேள்விக்கு பதில் அளித்துள்ள அவர் நாடாளுமன்றம் செல்வதற்கான உடனடி திட்டங்கள் எதுவுமில்லை என குறிப்பிட்டுள்ளார்.

19 வது திருத்தம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டவேளை பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் அதற்கு ஒருபோதும் ஆதரவளிக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் நாடாளுமன்றத்தில் 20 வது திருத்தம் முன்வைக்கப்படும் என்பதன் அடிப்படையிலேயே அவ்வேளை அதற்கு ஆதரவு வழங்கப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

20 வது திருத்தத்தின் மூலம் ஜனாதிபதிக்கு அதிகளவு அதிகாரங்கள் வழங்கப்படுவதை நியாயப்படுத்தியுள்ள பசில் ராஜபக்ச மக்கள் அதற்கான அதிகாரத்தை அவருக்கு வழங்கியுள்ளார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget