யாழ்.பல்கலைகழக வாசலில் நின்ற மாணவர்களை தகாத வார்த்தைகளால் பேசியதுடன், துப்பாக்கியை காண்பித்து சுடுவோம் என படையினரும், பொலிஸாரும் அச்சுறுத்திய நிலையில் மாணவர்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடாத்தியுள்ளனர்.
இது குறித்து மாணவர்கள் கூறுகையில், பல்கலைகழக வாசலில் வழக்கமாக நிற்பதுபோல் சில மாணவர்கள் நின்றிருந்தோம். அப்போது அங்கே வந்த பொலிஸார் எங்களை அங்கிருந்து வெளியேறுமாறு கூறினர்.
எதற்காக வெளியேறவேண்டும்? நாங்கள் பல்கலைகழக மாணவர்கள் பல்கலைகழக வாசலில் நிற்பதில் என்ன தவறு? என கேட்டபோது அங்குவந்த படையினர் எங்களை உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு கூறினர்.
ஏன் வெளியேற வேண்டும்? என கேட்டபோது துப்பாக்கியை துாக்கி காட்டி சுடுவோம் என அச்சுறுத்தியதுடன், விடுதலை புலிகள் என எங்களை கூறியதுடன், மிக இழிவான துாசண வார்த்தைகளால் தங்களை பேசினர் என மாணவர்கள் குற்றஞ்சாட்டியிருக்கின்றனர்.
சம்பவத்தையடுத்து பல்கலைகழக சுற்றாடலில் பெருமளவு படையினர், பொலிஸார் குவிக்கப்பட்டுள்ள நிலையில் பல்கலைகழக சுற்றாடலில் இருந்து பொலிஸாரும், இராணுவத்தினரும் வெளியேற வேண்டும் எனக்கூறி மாணவர்கள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தியுள்ளனர்.
Post a Comment