Ads (728x90)


தியாகி திலீபனின் நினைவேந்தலுக்கு தடைவிதிக்கப்பட்டதை கண்டித்து நாளை தொண்டமனாறு செல்வச்சந்நிதி ஆலய முன்றலில் நடாத்தப்படவிருந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு பருத்துறை நீதிமன்றம் தடை விதித்தது.

கொரோனா சுகாதார கட்டுப்பாடுகள் மற்றும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் இந்த தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தலைமையில் இந்த அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவிருந்த நிலையில் வல்வெட்டித்துறை பொலிஸாரால் இந்த தடை உத்தரவு விண்ணப்பம் இன்று முற்பகல் தாக்கல் செய்யப்பட்டது. 

தியாகி திலீபனின் நினைவேந்தலை நடாத்த யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் வழங்கிய தடை உத்தரவு நேற்று நீடிக்கப்பட்ட நிலையில் ஒன்றிணைந்த தமிழ் தேசியக் கட்சிகள் நேற்று கூடி நாளை தொண்டமனாறு செல்வச் சந்திநிதியில் உணவு தவிர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 

இதற்குத் தடை கோரி வல்வெட்டித்துறை பொலிஸாரால் சமர்பிக்கப்பட்ட வழக்கிலேயே பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றால் இந்த தடை உத்தரவு வழங்கட்டுள்ளது.


Post a Comment

Recent News

Recent Posts Widget