Ads (728x90)


ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் பஹ்ரைனுடனான இஸ்ரேலின் ஒப்பந்தம் மத்திய கிழக்கின் விடியல் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பாராட்டியுள்ளார்.

இஸ்ரேலுடனான தமது உறவை சுமூகமாக்கும் உடன்படிக்கைகளில் இரு வளைகுடா நாடுகளும் கைச்சாத்திட்டுள்ள நிலையில் ட்ரம்ப் இதனை கூறியுள்ளார்.

இந்த உடன்படிக்கை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததென 3 நாடுகளும் தெரிவித்துள்ளன. 1984 இல் இஸ்ரேல் நாடாக பிரகடனப்படுத்தப்பட்டதன் பின்னர் அதனை ஏற்றுக்கொண்ட மூன்றாவது மற்றும் நான்காவது அரபு நாடுகளாக இவை காணப்படுகின்றது.

ஏனைய நாடுகளும் இஸ்ரேலுடன் சுமூகமான உறவை ஏற்படுத்திக்கொள்ளும் என எதிர்பார்ப்பதாக ட்ரம்ப் கூறியுள்ளார். இந்த உடன்படிக்கைக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மத்தியஸ்தம் வகித்தமை குறிப்பிடத்தக்கது.

எனினும் தமது பிரச்சினை தீர்க்கப்படும் வரை சமரசத்துக்கு வரவேண்டாம் பலஸ்தீனியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

பலஸ்தீனத்துடனான சர்ச்சை தீர்க்கப்பட்டதன் பின்னரே இருதரப்பு உறவை வலுப்படுத்திக்கொள்வதாக சில தசாப்தங்களாக ஐக்கிய அரபு இராச்சியம் இஸ்ரேலை புறக்கணித்து வந்தமை  இங்கு குறிப்பிடத்தக்கது .


Post a Comment

Recent News

Recent Posts Widget