இலங்கையில் மாடுகளை இறைச்சிக்காகக் கொலை செய்வதைத் தடை விதிக்கும் திட்டத்தை செயல்படுத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் மகிந்த ராஜபக்சவால் முன்வைக்கப்பட்டுள்ள அமைச்சரவைப் பத்திரத்துக்கே அமைச்சரவை நேற்று ஒப்புதல் வழங்கியுள்ளது.
1958 ஆம் ஆண்டின் 29ஆம் இலக்க விலங்குச் சட்டம், 1893 ஆம் ஆண்டின் மாடுகள் கொலைக் கட்டளை சட்டம் மற்றும் தற்போது நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள கால்நடை கொலை தொடர்பாக உள்ளூர் அதிகாரிகள் நிறைவேற்றிய பிற தொடர்புடைய சட்டங்கள் மற்றும் விதிமுறைகளில் திருத்தம் செய்ய உடனடியாக தேவையான நடவடிக்கைகள் எடுப்பதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
தேவையான மாட்டிறைச்சியை இறக்குமதி செய்வதற்கும், மாட்டிறைச்சி உட்கொள்ளும் மக்களுக்கு சலுகை விலையில் வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சரவையில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது .
விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட பொருளாதார அமைப்பை கொண்ட நாடு என்ற வகையில் இலங்கையின் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை வளர்ப்பதற்கு கால்நடை வளத்தின் பங்களிப்பு முக்கியமானது.
மாடுகள் இறைச்சிக்காக வெட்ப்படுவதுஅதிகரித்து வருவதால் பாரம்பரிய விவசாய நோக்கங்களுக்காக தேவைப்படும் கால்நடை வளம் போதுமானதாக இல்லை. உள்ளூர் பால் தொழிலை மேம்படுத்துவதன் ஊடாக கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்துக்கு கால்நடை வளர்ப்பு உதவுகிறது என்றும் அமைச்சரவையில் அமைச்சர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கடந்த 8ஆம் திகதி ஆளும் கட்சியின் நாடாளுமன்றக் குழு, இலங்கையில் மாடுகளை இறைச்சிக்காக கொலை செய்வதனைத் தடை விதிக்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்திருந்தது.
Post a Comment