ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்தபடி பல்டியடித்து 20வது திருத்தத்தை ஆதரித்த ஒன்பது நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து வெளியேற்றப்பட்டதாக எதிர்க்கட்சி பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல நாடாளுமன்ற சபாநாயகருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
வெளியேற்றப்பட்ட 09 நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கும் நாடாளுமன்றத்தில் ஆளுங்கட்சியில் ஆசனங்களை ஒதுக்குமாறு அந்த கடிதத்தில் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களான டயானா கமகே, அ.அரவிந்தகுமார், இஷாக் ரஹ்மன், பைசல் காசிம், எச்.எம்.எம்.ஹரீஸ், எம்.எஸ்.தௌபீக், நசீர் அகமது, ஏ.ஏ.எஸ்.எம்.ரஹீம் ஆகியோரே பல்டியடித்து 20ஆவது திருத்தத்தை ஆதரித்தனர்.

Post a Comment