Ads (728x90)


அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தில் சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன இன்று கையெழுத்திட்டுள்ளார். இதன்மூலம் இன்று முதல் 20ஆவது திருத்தம் அமுலுக்கு வருவதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தெரிவித்தார்.

ஒக்டோபர் 21, 22ஆம் திகதிகள் இடம்பெற்ற இரு நாள் விவாதத்தை தொடர்ந்து அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் 2/3 பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டிருந்தது.

இதற்கு ஆதரவாக எதிர்க்கட்சியைச் சேர்ந்த 08 எம்.பிக்கள் உள்ளிட்ட 156 பேரும், எதிராக 65 பேரும் வாக்களித்திருந்தனர். 



.


Post a Comment

Recent News

Recent Posts Widget