மினுவாங்கொடை கொத்தணியை சேர்ந்த 1,083 பேர் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
எனினும் இலங்கையில் சமூக மட்டத்திலிருந்து கொரோனா தொற்றாளர்கள் எவரும் அடையாளம் காணப்படவில்லை. எனவே இது சமூக தொற்று அல்ல எனவும் இராணுவ தளபதியும், கொரோனா தடுப்பு ஜனாதிபதி செயலணியின் தலைவருமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தொிவித்துள்ளார்.
கொரோனா தொற்றுக்குள்ளான அனைவரும் கம்பகா - மினுவாங்கொட கொத்தணைியை சேர்ந்தவர்கள் எனவும், சமூக மட்டத்திலிருந்து ஒருவரும் அடையாளம் காணப்படவில்லை எனவும் எனவும் கூறியிருக்கின்றார்.
மேலும் இந்த நோய்த்தொற்றுடன் தொடர்புடைய அனைவரையும் அடையாளம் காணவும், அவர்களை தனிமைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறியிருக்கின்றார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை பாணத்துறை வைத்தியசாலையில் பணிப்புரிகின்ற தாதியர் ஒருவரின் மகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

Post a Comment