ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை உட்பட அனைத்து சர்வதேச அமைப்புகளிலும் இலங்கையின் இறைமை, சுதந்திரம் ஆட்புல ஒருமைப்பாடு ஆகியவற்றிற்கு முழுமையான ஆதரவை தொடர்ந்தும் வழங்கும் என சீனா உறுதியளித்துள்ளது.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சீனா உயர்மட்டக்குழுவினர் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவுடனான சந்திப்பின்போது இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளனர்.
இலங்கையுடனான உறவுகளை மேலும் வலுப்படுத்துவது சீன ஜனாதிபதியின் முன்னுரிமைக்குரிய விடயம் என சீன பிரதிநிதிகள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவிடம் தெரிவித்துள்ளனர்.
இலங்கை தனது அபிவிருத்தி முயற்சிகளில் வெற்றியடைவதற்கு சீனா தொடர்ந்தும் தனது ஆதரவை வழங்கும் என சீன பிரதிநிதிகள் குழு தெரிவித்துள்ளது.
இலங்கையுடனான இருதரப்பு உறவுகளை அபிவிருத்தி செய்வதை சீனா முன்னுரிமைக்குரிய விடயமாக்கியுள்ளது என இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சீனாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இலங்கை-சீனா சுதந்திர வர்த்தக உடன்படிக்கை குறித்த பேச்சுவார்த்தையை மீள ஆரம்பிப்பதற்கான திட்டம் உள்ளது எனவும் சீனா பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
உத்தேச அம்பாந்தோட்டை கைத்தொழில் வலய திட்டத்தினை தீவிரப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் சீனா பிரதிநிதிகள் ஆராய்ந்துள்ளனர்.

Post a Comment