கொழும்பு மாவட்டத்தில் தெமட்டகொட மற்றும் மருதானை பிரிவுகளில் உடன் அமுலாகும் வகையில் நேற்று இரவு 09 மணி முதல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
மறு அறிவித்தல் வரை ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இத்துடன் களுத்துறை மாவட்டத்தின் பயகல, பேருவளை, அளுத்கம, குளவிட்ட வடக்கு, குளவிட்ட தெற்கு, வெதவத்த, மகுருமஸ்வில மற்றும் மகலந்தாவ பொலிஸ் பிரிவுகளிலும் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
திங்கட்கிழமை காலை 05 மணி வரை இந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment