தமிழ் முற்போக்கு கூட்டணியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்தகுமார் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
அரவிந்தகுமார் தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கையை எடுக்குமாறு அவரது கட்சியான மலையக மக்கள் முன்னணியிடம் கேட்டுக் கொள்ளப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.
அரசியலமைப்பின் 20வது திருத்த சட்டமூலத்துக்கு எதிராக தமிழ் முற்போக்கு கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர். எனினும் அரவிந்தகுமார் மட்டும் ஆதரவாக வாக்களித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கட்சியின் முடிவை மீறி அரவிந்தகுமார் அரசை ஆதரித்ததையடுத்து அவரை இடைநிறுத்துவதென தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் அறிவித்திருந்தார். அவரது முடிவை தமிழ் முற்போக்கு கூட்டணியின் பாராளுமன்ற குழு நேற்று ஏகமனதாக ஏற்றுக் கொண்டு உறுதிப்படுத்தியது.
அவரது கூட்டணி அங்கத்துவத்தை முழுமையாக நீக்கும் முடிவை அரசியல் குழுவும், சட்ட நடவடிக்கையை கூட்டணி பங்காளியான கட்சி மலையக மக்கள் முன்னணியும் எடுக்கும். இதற்கு அவசியமான அனைத்து ஒத்துழைப்புகளையும் பங்காளி கட்சிகள் வழங்கும் என்றும் முடிவெடுக்கப்பட்டது.

Post a Comment