Ads (728x90)


கிளிநொச்சி தவிர்ந்த எனைய 24 மாவட்டங்களில் கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று கொரோனா தடுப்பிற்கான தேசிய செயலணி அறிவித்துள்ளது.

வடக்கு மாகாணத்தில் கிளிநொச்சியில் இருந்து கொரோனா நோயாளர்கள் எவரும் கண்டறியப்படவில்லை. 

இந்த மாதம் 04ஆம் திகதிக்குப் பின்னர் கம்பஹா மாவட்டத்திலிருந்து அதிக எண்ணிக்கையில் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். கம்பஹாவில் நேற்று காலை 06 மணிவரை 2,960 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இரண்டாவது அதிக எண்ணிக்கையான தொற்றாளர்கள் கொழும்பு மாவட்டத்தில் கண்டறியப்பட்டுள்ளனர். அங்கு 1,760 கொரோனா நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர்.

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளது. அதாவது மொத்தம் 10,105 ஆக உயர்ந்திருக்கின்றது. 

இதேவேளை நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில் தற்போதைய நிலவரம் நம்பிக்கை தரும் வகையில் இல்லை என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. 


Post a Comment

Recent News

Recent Posts Widget