கம்பஹா மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள மொத்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1,632 ஆக அதிகரித்துள்ளது. கம்பஹா மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரப் பகுதியில் 39 புதிய கொரோனா நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.
அவர்களில் 10 பேர் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலையத்திலும், இருவர் வர்த்தக வலையத்திற்கு வெளியேயும் உள்ள தொழிற்சாலையின் ஊழியர்கள் என கம்பஹா மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்திலிருந்து இதுவரை பதிவான மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 224 ஆகவும், வர்த்தக வலயத்திற்கு வெளியே பதிவான கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 22 ஆகவும் காணப்படுகிறது.
அதே நேரத்தில் கொரோனா நோய்த்தொற்றுடைய 25 நோயாளிகள் கட்டுநாயக்க சீதுவ பொது சுகாதார ஆய்வாளர் பிரிவில் பி.சி.ஆர் சோதனைகள் மூலம் உறுதி செய்யப்பட்டனர்.

Post a Comment