20வது திருத்தத்தின் நான்கு உட்பிரிவுகளான 3,5,14,22 ஆகியவற்றை நிறைவேற்ற நாடாளுமன்ற பெரும்பான்மையுடன் சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
குடிமக்களின் அடிப்படை உரிமைகளைத் தடுக்கும் அளவிற்கு ஜனாதிபதிக்கு 20வது திருத்தம் சட்டவிலக்களிக்கிறது என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். தேர்தல் ஆணைக்குழு கோரியபடி சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களை நடத்துவதற்கான நிபந்தனைகள், ஒரு வருடத்திற்குள் பாராளுமன்றம் கலைக்கப்படுதல் மற்றும் தேர்தல் ஆணைக்குழுவின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய அரச அதிகாரிகள் மறுப்பது குற்றமாகுமென்பதை நீக்கும் பிரிவு, ஜனாதிபதிக்கு சட்டவிலக்களிக்கும் பிரிவு ஆகியன சர்வஜன வாக்கெடுப்பு அவசியமென தெரிவித்துள்ளனர்.
எனினும் நாடாளுமன்ற குழுநிலை விவாதங்களில் அவற்றில் போதிய திருத்தங்களை செய்து மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றலாம் என்றும், மீதமுள்ளவற்றை நாடாளுமன்ற மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றலாம் என்றும் அறிவித்துள்ளனர்.
அரசியலமைப்பின் 20 வது திருத்தத்தின் தீர்ப்பு நேற்று காலை சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றின் இந்த தீர்ப்பு எதிர்வரும் 20ஆம் திகதி நாடாளுமன்றில் வெளியிடப்படும் என்று சபாநாயகரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment