சுகாதார பாதுகாப்பு முறைகளுக்கு அமைய இன்று இடம்பெறவுள்ள தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் நாளை திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகளுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதென பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இம்முறை 2,936 பரீட்சை மத்திய நிலையங்களில் புலமைப்பரிசில் பரீட்சை நடத்தப்படுவதுடன் 3,31,694 பரீட்சார்த்திகள் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்.
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் விசேட திட்டத்தின் கீழ் பரீட்சைகளை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்தார்.
கம்பஹா கல்வி வலயத்தில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சுமார் 6,000 மாணவர்களும், உயர்தரப் பரீட்சையில் 7,000 மாணவர்களும் தோற்றவுள்ளனர்.
தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டம் பிறப்பிக்கப்பட்டிருக்கும் கம்பஹா மாவட்டத்தில் விசேட பரீட்சை நிலையங்களை அமைக்க நடவடிக்கை எடுத்திருப்பதாக அவர் கூறினார்.
இந்த மாவட்டத்திலிருந்து வேறு பிரதேசங்களிலுள்ள பரீட்சை நிலையங்களில் பரீட்சைக்குத் தோற்றவிருந்த மாணவர்களுக்கு அவர்கள் தங்கியிருக்கும் பொலிஸ் பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள விசேட பரீட்சை நிலையங்களில் பரீட்சைக்குத் தோற்றும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.
முடக்கப்பட்டுள்ள புங்குடுதீவு, அனலைதீவு பகுதிகளிலும் திட்டமிட்டபடி இன்று பரீட்சைகள் நடைபெறும்

Post a Comment