Ads (728x90)


உலகம் முழுவதும் கொரோனா தொற்றிற்கு 36,038,353 பேர் உள்ளாகியுள்ளனர். கொரோனாவிலிருந்து 27,144,398 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்றும், உலகம் முழுவதும் கொரோனாவினால் 1,054,541 பேர் மரணமடைந்துள்ளனர் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது. 

மேலும் உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பிற்குள்ளான 7,839,414 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,722,746 எனவும், பலியானோர் எண்ணிக்கை 215,822 எனவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,935,545 எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேபோல் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,754,179 ஆகவும், பலியானோர் எண்ணிக்கை 104,591 ஆகவும், குணமானவர்களின் எண்ணிக்கை 5,741,253 ஆகவும் உயர்ந்துள்ளது.

பிரேசிலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,970,953 எனவும், பலியானோர் எண்ணிக்கை 147,571 எனவும், குணமானவர்களின் எண்ணிக்கை 4,352,871 எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

ரஷ்யா, கொலம்பியா, பெரு, ஸ்பெயின், அர்ஜெண்டினா, மெக்சிகோ மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் முதல் பத்து இடங்களில் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது


Post a Comment

Recent News

Recent Posts Widget