Ads (728x90)


இன்று இதுவரை நாட்டில் 368 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதுவரை வெளியாகியுள்ள தகவலின்படி பெலியகொட மீன் சந்தை தொற்றாளருடன் நெருங்கிய தொடர்பை பேணிய  215 பேருக்கும், தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் உள்ள 37  பேருக்கும், பேருவளை மீன்பிடித் துறைமுகத்தில் 24 பேருக்கும்  கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இத்துடன் தற்போது மேலும் 92 பேருக்கு  தொற்று உறுதியாகியுள்ளது.

இதனையடுத்து மினுவங்கொட மற்றும் பெலியகொட கொத்தணியின் மொத்த எண்ணிக்கை 3,958 ஆக உயர்ந்துள்ளது.

நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 7,521 ஆக உயர்வடைந்துள்ளதுடன்  10 வெளிநாட்டவர்கள் உட்பட 3,717 தொற்றாளர்கள் தற்போது நாடு முழுவதும் உள்ள 27  கொரோனா தொற்றுக்கான வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை கொரோனா சந்தேகத்தில் 418 பேர் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன் கொரோனா தொற்று காரணமாக 15 பேர் உயிரிழந்தும் உள்ளனர்.



Post a Comment

Recent News

Recent Posts Widget