நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக அதிகளவில் தொற்றாளர்கள் பதிவாகும் பகுதிகளுக்கு பொலிசாரினால் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் மேல் மாகாணத்தின் கொழும்பு, கம்பஹா, களுத்துறை மாவட்டங்களில் இதுவரை 51 பொலிஸ் பிரிவுகளுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
கொழும்பில் மேலும் மாளிகாவத்தை, வாழைத்தோட்டம், டாம் வீதி, ஆட்டுப்பட்டித் தெரு, கரையோர பொலிஸ் ஆகிய 05 பொலிஸ் பிரிவுகளில் உடன் அமுலாகும் வகையில் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
அந்த வகையில் தற்போது வரை இலங்கையில் 56 பொலிஸ் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப்பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
குளியாப்பிட்டி பகுதியில் 05 பொலிஸ் பிரிவுகள், கம்பஹாவில் 33 பொலிஸ் பிரிவுகள், கொழும்பில் 15 பொலிஸ் பிரிவுகள், களுத்துறையில் 03 பொலிஸ் பிரிவுகள் என தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Post a Comment