கல்விப்பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகள் திட்டமிட்டபடி நடைபெறும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
குறித்த இரு பரீட்சைகளும் திட்டமிட்டவாறு சுகாதார பிரிவின் வழிகாட்டல்களுக்கு அமைய நடைபெறும் எனவும், கம்பஹா மாவட்ட மாணவர்களுக்கு விசேட ஏற்பாடுகள் செய்யப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment