கம்பஹா மாவட்டத்தில் 19 பொலிஸ் பிரிவுகளில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தின் காரணமாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூபா 5,000 கொடுப்பனவு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் அதனை வழங்கும் பொருட்டு ரூபா 400 மில்லியனை அரசாங்கம் ஒதுக்கியுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
கம்பஹா மாவட்டத்திலுள்ள குறித்த பகுதிகளில் கடந்த ஒக்டோபர் 04ஆம் திகதி முதல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

Post a Comment