Ads (728x90)


நியூஸிலாந்து பொதுத்தேர்தலில் பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். 

ஜெசிந்தா ஆர்டனின் தொழிற் கட்சி 49 சதவீத வாக்குகளைப் பெற்று பெரும்பான்மை வாக்குகளால் வெற்றியீட்டியுள்ளது. எதிர்க்கட்சியான இடதுசாரி கட்சி 27 சதவீத வாக்குகளையே பெற்றுள்ளது. பொதுத்தேர்தலில் வெற்றிபெற்ற ஜெசிந்தா ஆர்டன் இம்முறை 64 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளார்.

நியூஸிலாந்தின் பொதுத்தேர்தல் கடந்த மாதம் நடைபெறவிருந்த நிலையில், கொரோனா அச்சம் காரணமாக தேர்தல் ஒரு மாதத்திற்கு பிற்போடப்பட்டது. இந்நிலையில் பொதுத்தேர்தல் நேற்று நடைபெற்றது. 

வாக்களிப்பு இடம் பெறுவதற்கு முன்னர் கடந்த 03 ஆம் திகதி முற்கூட்டியே வாக்களிக்கும் நடவடிக்கை ஆரம்பமானது. இதில் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட பிரஜைகள் தமது வாக்கினை பதிவு செய்தனர்.

கொரோனா தொற்று ஒழிப்பை வெற்றிகரமாக முன்னெடுத்ததால் இம்முறை தேர்தலில் பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் வெற்றி பெறுவார் என ஏற்கனவே கருத்துக் கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



Post a Comment

Recent News

Recent Posts Widget