Ads (728x90)


இலங்கை மனித உரிமை விவகாரம் தொடர்பாக ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் அண்டோனியோ குட்டரஸ் கவலை வெளியிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகளின் 45 ஆவது மனித உரிமை கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான அறிக்கை நேற்று சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் அவர் குறித்த அறிக்கையில் தனது கருத்துக்களை முன்வைத்துள்ளார்.

இலங்கையில் மனித உரிமை மீறப்படுதல் தொடர்பாக தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருவதாக குறித்த அறிக்கையில் ஐ.நா.செயலாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கையிலிருந்து கடந்த 2018 ஆம் ஆண்டு ஜெனீவாவில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைக் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக சென்றவர்கள், தமது பயணத்துக்கு முன்னரும் அதற்கு பின்பும் விசாரிக்கப்பட்டதாக அவர் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் இவ்வாண்டு நடைபெறும் மனித உரிமை கூட்டத்தொடரின் கிளைக் கூட்டங்களின்போது இலங்கை மற்றும் ஜெனீவாவை தளமாகக்கொண்டு இயங்கும் பல அமைப்புகள் இவ்வாறான சவால்கள் குறித்து முறைப்பாடுகளை முன்வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் கடந்த 2019 ஆம் ஆண்டு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் உதவி செயலாளர் நாயகம் இலங்கையில் நிலவும் அச்சுறுத்தல் மற்றும் பழிவாங்கல் முறைமை தொடர்பாக எழுத்து மூல அறிக்கையை இலங்கை அரசாங்கத்துக்கு சமர்ப்பித்துள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், இவ்வாறான விடயங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget