கட்டுநாயக்க பொலிஸ் பிரிவில் இன்று காலை 05 மணி தொடக்கம் மறுஅறிவித்தல் வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க ஏற்றுமதி உற்பத்தி வலய ஊழியர்கள் தமது நிறுவன அடையாள அட்டையை ஊரடங்கு சட்ட அனுமதிப் பத்திரமாக பயன்படுத்த முடியும் என்று கொரோனா தொற்றுப் பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் பிரதானியும், இராணுவ தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதுவரை 18 பொலிஸ் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

Post a Comment