Ads (728x90)


மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலை பெண் ஊழியரின் கொரோனா தொற்று காரணமாக தொற்றுக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 1,608 ஆக உயர்வடைந்துள்ளது.

வத்தளைப் பிரதேசத்தில் 18 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். வத்தளை, ஹெந்தல, போப்பிட்டிய  பகுதியை சேர்ந்தவர்களே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனால் குறித்த பகுதியில் 85 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

நீர்கொழும்பு பகுதியில் கொரோனா தொற்றாளர்கள் 10 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளன. புனித ஜோசப் தெரு, பிடிப்பன, உப்பலம, முன்னக்கரய மற்றும் கட்டுவாபிட்டிய ஆகிய பகுதியை சேர்ந்தவர்களே இவ்வாறு கொரோனா தொற்றாளராக இனங்காணப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்கள் அனைவரும்  காய்ச்சல் காரணமாக கொழும்பு வைத்தி யசாலைக்கு அனுப்பப்பட்டதாக நீர் கொழும்பு சுகாதாரப் பகுதியினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் கொழும்பு தேசிய வைத்தியசாலை தாதி ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவு விடுதியில் பணியாற்றிய மத்துகமை பகுதியை சேர்ந்த தாதியொருவரே இவ்வாறு கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார்.

கம்பஹா – மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலை ஊழியர்களுடன் நெருங்கிப் பழகிய 17 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்களில் 05 பேர் தனிமைப்படுத்தல் மையங்களிலும் ஏனையோர் வெவ்வேறு இடங்களிலும் தனிமைப்படுத்தப்பட்ட நிலையிலும் கண்டறியப்பட்டுள்ளனர்.


Post a Comment

Recent News

Recent Posts Widget