அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரின் மனைவி மெலனியா ட்ரம்ப் ஆகியோருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தத் தகவலை ட்ரம்ப் தனது ருவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
அமெரிக்காவில் தீவிரமாக கொரோனா வைரஸ் பரவிய நேரத்தில் கூட முகக்கவசம் அணியாமல் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் வலம் வந்தார். இந்நிலையில் ட்ரம்பின் ஆலோசகர் ஹிக்ஸ் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து டொனால்ட் ட்ரம்ப், அவரின் மனைவி மெலனியா ட்ரம்ப் ஆகியோர் தனிமைப்படுத்தப்பட்டனர். இது தொடர்பாக ஜனாதிபதி ட்ரம்ப் ருவிட்டரில் பதிவிட்ட கருத்தில் “ சிறிய இடைவெளிகூட இல்லாமல் தொடர்ந்து பணியாற்றிய எனது ஆலோசகர் ஹிக்ஸுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜனாதிபதி ட்ரம்ப் ருவிட்டரில் பதிவிட்ட கருத்தில் தனக்கும், தனது மனைவிக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
Post a Comment