இலங்கையின் ஒவ்வொரு மாகாணத்திலும் ஒரு சிறுவர் வைத்தியசாலையை அமைப்பதில் தான் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ் தெரிவித்துள்ளார். கொழும்பு மற்றும் கண்டிக்கு மட்டுப்படுத்தப்பட்ட சிறுவர் வைத்தியசாலையை அனைத்து மாகாணங்களிலும் விஸ்த்தரித்து. அதனை மேம்படுத்துவதற்கும் பராமரிப்பதற்கும் அரசாங்கம் கவனம் செலுத்துகின்றது பிரதமர் கூறினார்.
கொழும்பு சிறுவர் சீமாட்டி வைத்தியசாலையில் 9 மாடிகளைக் கொண்ட தீவிர சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை வார்ட் தொகுதி மற்றும் எலும்பு மச்சை மாற்று பிரிவுடன் புதிய இயக்க பிரிவினையும் பிரதமர் அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.
மேலும் இந்நிகழ்வானது சர்வதேச சிறுவர் தினம் சீமாட்டி வைத்தியசாலையின் 125 ஆவது வருட நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டதுடன், இதில் ஷிராந்தி ராஜபக்ஷ்வும் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
Post a Comment